புளியங்குடி: புளியங்குடி நகராட்சி தலைவர் பதவி கடந்த ஆண்டு தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவிற்கு ஒதுக்கப்பட்டது. தற்போது உள்ளாட்சி தேர்தலில் பொது ஆண்கள் பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தன. திமுக சார்பில் நகர செயலாளர் வக்கீல் செல்வகுமார், அதிமுக சார்பில் நகர செயலாளர் சங்கரபாண்டியன், மதிமுக சார் பில் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சதன் திருமலைக்குமார், முஸ்லீம்லீக் சார்பில் நகர துணைத்தலைவர் முகமதுபாவா, பாஜ சார்பில் மாவட்ட துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், தேமுதிக சார்பில் மைதீன் அப்துல் காதர் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தேமுதிகமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அக்கட்சிக்கு வேலூர், கோவை ஆகிய 2 மாநகராட்சிகளும், 25 நகராட்சிகள், 61 பேரூராட்சிகளும் ஒதுக்கப்பட்டன. இதில் நெல்லை மாவட்டத்தில் புளியங்குடி நகராட்சியும் அடங்கும்.
மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நகர செயலாளர் மாரியப்பன் நகராட்சி தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சிஐடியு தாலுகா தலைவரான இவர் கடந்த 21 ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மாரியம்மாள், மகள்கள் ராமலட்சுமி, சித்ரா, மகன் செல்வகுமார் உள்ளனர். இவர் முதன்முறையாக நகராட்சிதலைவர் பதவிக்கு வேட்பாளராக களம் இறங்குகிறார்.

No comments:
Post a Comment